அதிக சத்தத்தோடு காரை இயக்கிய நடிகர் ஜெய் போலீசில் பிடிபட்டார்.

🌍அதிக சத்தத்தோடு காரை இயக்கிய நடிகர் ஜெய் போலீசில் பிடிபட்டார். அவரை வைத்தே விழிப்புணர்வு வீடியோவை ரெடி செய்து அசத்தியுள்ளது காவல்துறை.” இது என்னோட கார்தான். இந்த மாதிரி சத்தம் அதிகம் வச்சீங்கன்னா, டிராபிக் போலீஸ் முதலில் பிடிப்பார்கள். அதிக சத்தம் வந்தால் முதலில் காரை பறிமுதல் செய்வார்கள். மருத்துவமனைகள், பிறருக்கு இந்த சத்தத்தால் பாதிப்பு ஏற்படும். இதுக்கு மேல் யாரிடமும் இந்த சவுண்ட் இருக்க கூடாது. அதுதான் எங்கள் பணிவான வேண்டுகோள். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று பேசுகிறார். அருகே நின்ற இன்ஸ்பெக்டரும், சத்தம் அதிகமாக வரும் கார்கள் பறிமுதல் செய்யப்படும் என்பதை உறுதியாக தெரிவிக்கிறார்.🌐