Annapparavai news Mon 30,2019

Annapparavai news
Mon 30,201(9

✒✒செய்திகள் 1

🌐🌐தலைப்புச் செய்திகள்

♦♦தகுதி தேர்வு முடிந்த 7 நாளில் போட்டி தேர்வு

♦♦ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு

♦♦கல்வி கட்டணம்: ஐ.ஐ.டி.,யில் உயர்வு

♦♦பாட புத்தகம் ஒரே தவணையில் வழங்க வேண்டும்

♦♦மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்புக்கு இன்று முதல் அக்.25 வரை விண்ணப்பம் பெறலாம்

செய்தி 2

✡✡ஒரு மாதத்தில் தேர்வு அட்டவணை: டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் அறிவிப்பு

♦♦போட்டி தேர்வுகளுக்கான ஆண்டு அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது

♦♦இதுதொடர்பாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன், செயலர் நந்தகுமார் அளித்த பேட்டி:அரசு பதவிகளுக்கான, ‘குரூப் – 2, குரூப் – 2 ஏ’ இரண்டுக்கும், ஒரே தேர்வு முறை அமலாக உள்ளது. முதல்நிலை தகுதி தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவோருக்கு, பிரதான தேர்வு நடத்தப்படும். முன்பிருந்த, பொதுத்தமிழ் அல்லது ஆங்கில விடைத்தாளுக்கு பதில், முதல் நிலை தேர்விலும், பிரதான தேர்விலும், தமிழ் மொழி திறனை அறிந்து கொள்ளும் வகையில், அதிக கேள்விகள் இடம் பெறும். தமிழ் கலாசாரம், பண்பாடு, திருக்குறள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது

♦♦புதிய தேர்வு முறையால், தமிழ் தெரியாதவர்கள், இனி, போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாது. ஏற்கனவே இருந்த, எட்டு பாடங்களுடன், தமிழ் கலாசாரம் மற்றும் தமிழக நிர்வாக முறை குறித்த, இரண்டு புதிய பாடங்களும், பிரதான தேர்வில் சேர்க்கப் பட்டுள்ளன

♦♦புதிய தேர்வு முறை, கிராமப்புற மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும். மனப்பாட முறைக்கு பதில், புரிந்து படிப்பவர்களுக்கு ஊக்கத்தை தரும்.வல்லுனர் குழுகடந்த ஆண்டில், போட்டி தேர்வுகள் வழியாக, 17 ஆயிரத்து, 500 பேருக்கு, அரசு வேலை கிடைத்துள்ளது

♦♦தேர்வுகளில், தவறாக கேட்கப்படும் கேள்விகளுக்கு, வல்லுனர் குழு அமைத்து, ஆய்வு நடத்தி முடிவு எடுக்கப்படும். தேர்வுகளுக்கான ஆண்டு கால அட்டவணை, ஒரு மாதத்தில் வெளியிடப்படும்

♦♦இவ்வாறு, அவர்கள் கூறினர்

✳✳✳✳✳✳✳
செய்தி 3

🌐🌐தகுதி தேர்வு முடிந்த 7 நாளில் போட்டி தேர்வு

💥💥ஆசிரியர் தகுதித் தேர்வு முடிந்த ஒரு வாரத்தில், வெற்றி பெற்றவர்களுக்கு, போட்டித் தேர்வு நடத்தப்படும்,” என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

💥💥ஈரோடு மாவட்டம், கோபியில் நேற்று நடந்த, சமுதாய வளைகாப்பு விழாவில், அவர் பேசியதாவது

💥💥முதல் வகுப்பு துவங்கி, ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கிலத்தை படிப்படியாக கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழோடு சேர்ந்து ஆங்கிலம் கற்றுத்தரவேண்டும் என்ற கடமை, எங்களுக்கு இருக்கிறது.ஆறு முதல் எட்டாம் வகுப்பினருக்கு, 1,000 வார்த்தைகளில், சரளமாக ஆங்கிலம் பேச நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல், இன்று வரை, 46 லட்சம் மாணவ – மாணவி யருக்கு, லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது

💥💥கரும்பலகை முறையை மாற்றி, 90 ஆயிரம் பள்ளிகளுக்கு, ஸ்மார்ட் போர்டு வழங்கப்படும். அரசு பள்ளிகளில், மோசமாக உள்ள பழைய வகுப்பறை கட்டடங்களை அகற்ற, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்துக்குள், போட்டித் தேர்வு நடத்தப்படும். இதற்காக, இயக்குனர் ஒருவரை நியமித்துள்ளோம்

💥💥இவ்வாறு, அவர் கூறினார்

🌀🌀🌀🌀🌀🌀🌀

செய்தி 4

🛑🛑கல்வி கட்டணம் ஐ.ஐ.டி.,யில் உயர்வு

✳✳எம்.டெக்., படிப்புக்கான கல்வி கட்டணம் உயர்த்தப்படும்’ என, ஐ.ஐ.டி., நிர்வாகம் அறிவித்துள்ளது

✳✳இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஐ.ஐ.டி.,யில் சேரும், எம்.டெக்., மாணவர்களுக்கு, பல ஆண்டுகளாக கல்வி கட்டணம் உயர்த்தப்படவில்லை. எனவே, கல்வி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பை பாதியில் விடாமல் தடுப்பதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது

✳✳இதற்காக, ஐ.ஐ.டி.,யின் நிர்வாக குழு கூடி, கட்டண உயர்வை முடிவு செய்யும். இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். அதேநேரத்தில், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடரும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

🔰🔰🔰🔰🔰🔰🔰

செய்தி 5

✳✳பாட புத்தகம் ஒரே தவணையில் வழங்கவேண்டும்:தனியார் பள்ளிகள் கோரிக்கை

♦♦பாட புத்தகங்களை, ஒரே தவணையில் வழங்க வேண்டும்’ என, தனியார் பள்ளிகள் தரப்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

♦♦தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு சார்பில் இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கப் படுகின்றன

♦♦தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணம் பெற்று, தமிழ்நாடு பாட நுால் கழகம் வாயிலாக, புத்தகம் வினியோகிக்கப் படுகிறது

♦♦ஒன்று முதல், 9ம் வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரித்து, மூன்று தவணைகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, இரண்டு தவணைகளாகவும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த புத்தகங்களை, முன்கூட்டியே வழங்காமல், தாமதமாக வழங்குவதால், பள்ளிகளில் பாடம் நடத்துவதும், திருப்புதல் செய்வதும் பாதிக்கப்படுகிறது

♦♦பொது தேர்வு நடத்தப்படும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கும், பாட புத்தகங்கள் வழங்க தாமதமாவதால், வகுப்புகள் நடத்துவதில் தாமதம் ஏற்படுவதாகவும், பாடங்களை மீண்டும் ஒரு முறை, பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும், பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது

♦♦இது குறித்து, தமிழ்நாடு தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அதன் மாநில தலைவர் ஆறுமுகம், மாநில செயலர் பிரமநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள், பள்ளி கல்வி இயக்குனர்களை சந்தித்து, மனு அளித்துள்ளனர்

♦♦மேலும், ஒவ்வொரு பருவத்துக்கும், பாடநுால் கழக கிடங்குகளில், தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி, நெருக்கடியை ஏற்படுத்துவதால், அனைத்து புத்தகங்களையும் ஒரே பருவத்தில் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கையும் எழுந்துள்ளது

🌐🌐🌐🌐🌐🌐🌐

செய்தி 6

🔰🔰மருந்தாளுநர், நர்சிங்தெரபி படிப்புக்கு இன்று முதல் அக்.25 வரை விண்ணப்பம் பெறலாம்: ஓமியோபதித்துறை அறிவிக்கை

💥💥ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி படிப்புக்கான விண்ணப்பம் இன்று முதல் பதிவிறக்கம் செய்து அக்டோபர் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது குறித்து ஓமியோபதி துறை வெளியிட்டுள்ள அறிவிக்கை:ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி பட்டயப்படிப்புகளும் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது

💥💥அதன்படி பாளையங்கோட்டை மற்றும் சென்னையில் அமைந்துள்ள அரசு ஆயுஷ் பாராமெடிக்கல் பள்ளிகளில் 2019-20ம் ஆண்டிற்கான இரண்டரை ஆண்டுகால ஒருங்கிணைந்த மருந்தாளுநர் மற்றும் நர்சிங்தெரபி பட்டயப் படிப்புகளில் பயில மேல்நிலைப்பள்ளி தேர்வில் முதன் முறையாகவே அறிவியல் பாடங்களை எடுத்து தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

💥💥மேலும், விருப்பமுள்ள நபர்கள் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினை இந்திய முறை மருத்துவ கல்லூரிகளின் விவரம் மற்றும் விண்ணப்பக் கட்டணம், படிப்பின் விவரம், அடிப்படைத் தகுதி, கல்விக் கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்ப படிவம் இன்று முதல் அக்டோபர் 25ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்டு அக்டோபர் 25ம் தேதி மாலை 5.30 மணிக்குள் வழங்க வேண்டும்

🙏🙏🙏🙏🙏🙏