🌍துப்பாக்கி சுடுதல் போட்டி – கோவையை அடுத்து மத்திய பிரதேசத்தில் கால் பதிக்கும் நடிகா் அஜித்🌐

🌍துப்பாக்கி சுடுதல் போட்டி – கோவையை அடுத்து மத்திய பிரதேசத்தில் கால் பதிக்கும் நடிகா் அஜித்🌐

அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார்.

அனக்காபுத்தூர் அரசு பள்ளியில் படித்த ஜீவிதா.ஒரு ஆண்டு NEET பயிற்சி எடுத்தார். 605 மதிப்பெண்களுடன் இன்று அவர் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர உள்ளார். இவர்தான் மாணவர்களின் கதாநாயகி. அப்போ பள்ளி படிப்பு மட்டும் தேவையில்லை நீட் பயிற்சியும் அவசியம்னு சொல்றிங்க

சிறுத்தையை கற்களால் அடித்தே விரட்டிய சிறுவன்

  சிறுத்தையை கற்களால் அடித்தே விரட்டிய சிறுவன். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தொகவாட் அருகேயுள்ள கர்பாத்வாடி என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் நரேஷ் கலுராம் பாலாவும்,இவனது தம்பி ஹர்‌ஷத் விட்டல் பாலாவுடன் அருகில் உள்ள முர்பாத் வன சரகம் பகுதிக்கு சென்று இருந்தான். இவர்களுடன் பாட்டி கான்கிபாயும் சென்று இருந்தார். அங்கு பாட்டி வேலையில் மும்முரமாக இருக்க, சிறுவர்கள் இருவரும் அங்குள்ள மரங்களில் இருந்து கீழே உதிர்ந்து கிடந்த நாவற்பழங்களை சேகரிக்க சென்றனர். அங்கு ஒரு… Continue reading சிறுத்தையை கற்களால் அடித்தே விரட்டிய சிறுவன்

பூக்கடை துரைப்பாண்டி ஆச்சர்ய மனிதர்தான்…

விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை வைத்து நடத்தி வரும் துரைப்பாண்டி, அங்குள்ளவர்களுக்கு ஆச்சர்ய மனிதர்தான்… தினம் வியாபாரம் முடிந்து இரவு கடையை பூட்டி விட்டு செல்லும் போது மறக்காமல் கடைக்கு வெளியே 4 மாலைகளை கட்டி தொங்க விட்டுச் செல்கிறார். மறு நாள் காலை கடையை திறக்க வரும் போது கட்டி தொங்கப்பட விட்ட மாலையில் சில காணாமல் போயிருந்ததை கண்டால் நிம்மதி பெருமூச்சு விட்டு பிறகு வழக்கம் போல் பூ வியாபாரத்தை ஆரம்பித்து… Continue reading பூக்கடை துரைப்பாண்டி ஆச்சர்ய மனிதர்தான்…

பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்அமிதவ் கோஷ். 

பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்அமிதவ் கோஷ். 2018 ஞானபீட விருது  இந்தோ- ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் பெறுகிறார்.1956இல் கல்கத்தாவில் பிறந்து ஆக்ஸ்போர்டில் சமூக மானிடவியலில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் இந்தியா, இலங்கை,பங்ளாதேஷ் ஆகிய நாடுகளில் இளமையைக் கழித்தவர்.1990இல் The Shadow Lines நாவலுக்காக சாகித்திய அகாடமி விருதும், 2007இல் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.இவரது படைப்புகள் பயணம், புலம் பெயர்தல், தாய்நாடு விட்டு வெளிநாட்டில் வாழ்தல் ஆகியவற்றைச் சுற்றிச் சுழல்பவை.

ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை.

இந்திய ஓவியர் பூபன் காகர் வரைந்த ஓவியம் ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை. லண்டன் ஏல மையத்தில் இந்திய ஓவியர் பூபன் காகர் வரைந்த ஓவியம் ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அவர் 1934-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர். 2003-ம் ஆண்டு காலமானார். அவரது ஓவியங்கள் சர்வதேச புகழ் பெற்றவை. அப்படி இந்த ஓவியத்தில என்ன இருக்குன்னு கேக்காதீங்க!

தன்னம்பிக்கையால் அனைவரையும் வியக்கவைக்கும் லதீஷா

“குழந்தையைத் தூக்கிட்டு போற மாதிரிதான் என்னை அப்பா எந்நேரமும் சுமந்துட்டு போவாங்க. எனக்கு நம்பிக்கை வற்றாமயிருக்கக் காரணம் என் அப்பாதான். எல்லா மகள்களுக்கும் அவங்க அப்பாதான் ரோல் மாடலா இருப்பாங்க. எனக்கு என் அப்பா சூப்பர் ஹீரோ!” “என் நோய் என் வளர்ச்சிக்குத் தடை அல்ல” என உரக்கச் சொல்கிறார், 24 வயதாகும் லதீஷா அன்சாரி. சிறு வயதிலேயே எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர். அதுமட்டுமன்றி நுரையீரல் உயர் ரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார். செயற்கை சுவாசத்தின் உதவியால் மட்டும்… Continue reading தன்னம்பிக்கையால் அனைவரையும் வியக்கவைக்கும் லதீஷா