ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க? அதவும்  ஷோ் ஆட்டோவுல…

ஒரு ஆட்டோல எத்தனை பேரைத்தான் ஏத்தாராங்க? அதவும்  ஷோ் ஆட்டோவுல… இப்படி எல்லா ஊருல இருக்கிற  போக்குவரத்து  துறைகளிலும்  லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு மறைமுக permission போக்குவரத்து துறை  கொடுத்து விடுகின்றது. இப்படி அதிக சுமை மற்றும் அதிக பயணிகள் ஏற்றி செலவதை  பற்றி கண்டுகொள்ளாமால் இருந்தால் பெரும் விபத்துக்கள் சந்திக்க நோிடலாம். நடவடிக்கை எடுக்குமா இந்த அரசு நோ்மையான அதிகாாிகளை கொண்டு.

தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கோயம்பேடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது கோயம்பேட்டிலிருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்துகள் வடபழனி, அசோக்பில்லர், ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்பட்டு வந்தன. மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு முதல் அனைத்து விரைவு பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் மெட்ரோ மற்றும்… Continue reading தமிழக அரசின் எக்ஸ்பிரஸ் பஸ்கள் போக்குவரத்தில் 6 ஆண்டுகளுக்குப்பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார்.

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார். குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக் மேற்பார்வையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேற்று குளச்சல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது 17 வயதிற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பைக் ஓட்டி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பெற்றோர்கள் – சிறுவர்களுக்கும் விபத்து… Continue reading கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி நாத் உத்தரவிட்டுள்ளார்.

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்:-

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்:- ₹2000-3000 வசூலிக்கப்படுமாம்  6 மாத சிறை தண்டனை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால்:- ₹500 ரூபாயும் 3 மாத சிறைத்தண்டனையுமாம் ~*தமிழ்நாடு போக்கு வரத்துத்துறை*

போக்குவரத்து விதிகளுக்கு முரணாக..

போக்குவரத்து விதிகளுக்கு முரணாக.. நேற்று ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் எடுக்கப்பட்ட படம். போக்குவரத்து விதிகளுக்கு முரணாக இப்படி ஒரு எண் பலகை தேவையா ? ஒரு விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்றால், இந்த வாகனத்தின் எண்ணை எப்படி ஒரு போலீஸோ , பொது மக்களோ அவசரமாக குறித்து வைத்துக் கொள்வது ? இதில் இவர் ஒரு வக்கீல்  வேறு. வெட்கக்கேடு !  இப்படித்தான் தமிழ் பற்றைக் காட்ட முடியுமா ?  வாகனத்தில் ஆஙகிலத்தில் மாருதி சுசூகி என்று இருக்கிறதே.… Continue reading போக்குவரத்து விதிகளுக்கு முரணாக..

ஒருமணி நேரத்தில்⏱ ஓட்டுநர் உரிமம்

  ஒருமணி நேரத்தில்⏱ ஓட்டுநர் உரிமம் போக்குவரத்துத் துறை ஆணையர் தகவல்* புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் பெறலாம் என போக்குவரத்துத் துறை ஆணையர்தெரிவித்தார். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிப்பவர்களுக்கு புகைப்படம் எடுத்த ஒரு மணி நேரத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்தார். ReplyForward

தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு!

சுங்கக்கட்டணம் 3 முதல் 5 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் உள்ள சூரப்பட்டு, வானகரம், பரனூர், திண்டிவனம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகள் இந்த பட்டியலில் இடம்பெறுகின்றன. இதன் மூலம் கார்களுக்கான சுங்கக்கட்டணம், 55 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்கிறது. இலகு ரக சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 90ல் இருந்து 95 ரூபாயாக அதிகரிக்கிறது. மேலும் லாரி மற்றும் பேருந்துகளுக்கான கட்டணம் 190 ரூபாயில் இருந்து 195 ரூபாயாக உயருகிறது.

டாடா ஹாரியர் தான் சிறந்தது.

டாடா ஹாரியரை காட்டிலும் ஹூண்டாய் கிரெட்டா தலை சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் டாடா நிறுவனம் ஆல் நியூ ஹாரியர் எஸ்யூவி (Tata Harrier SUV) காரை கடந்த ஜனவரி மாத கடைசியில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது மார்க்கெட்டில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக டாடா ஹாரியர் உருவெடுத்துள்ளது. டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் ஒரு சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் தற்போது 6 மாதங்கள் வரை உள்ளது. இந்திய நிறுவனங்களில் டாடாவின் கார்கள் விரைவாக செயலாற்றக்கூடியவை.… Continue reading டாடா ஹாரியர் தான் சிறந்தது.

பதறும் ஓலா நிர்வாகம்..!

சமீபத்தில் தான் ஓலா தன் பைக் டாக்ஸி சேவைகளை பெங்களூரூவில் தொடங்கி முன்னோட்டம் பார்த்தது. ஆனால் அதற்கு முறையாக அரசாங்கத்திடமோ அல்லது போக்குவரத்து துறைகளிடமோ எந்த ஒரு உரிமத்தையும் வாங்க வில்லை என கர்நாடக போக்குவரத்து 2019 மார்ச் 18-ம் தேதியே நோட்டீஸ் அனுப்பி இருக்கிறதாம். ஓலா நிறுவனத்துக்கு ஜூன் 2016-ம் ஆண்டில் இருந்து ஜூன் 2021-ம் ஆண்டு வரை டாக்ஸி (நான்கு சக்கர மோட்டார் வாகனம்) மட்டுமே வைத்து கேப் சர்வீஸ் நடத்த உரிமம் வழங்கி… Continue reading பதறும் ஓலா நிர்வாகம்..!

இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள்

பிப்ரவரி 2019-க்கான கார்கள் விற்பனை விவரம் வெளியாகி இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சமூகம் இந்த கணக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த கணக்குப் படி மாருதி சுஸிகியின் மாருதி ஆல்டோ தான் பிப்ரவரி 2019-ம் மாதம் அதிகம் விற்பனையான கார். பிப்ரவரியில் மட்டும் 24,751 மாருதி ஆல்டொக்கள் விற்பனையாகி இருக்கிறதாம். ஆல்டோவைத் தொடர்ந்து மாருதி சுஸிகியின் ஸ்விஃப்ட் கார்கள் 18,224 எண்ணிக்கையில் கடந்த பிப்ரவரி 2019-ல் மட்டும் விற்பனை ஆகி இரண்டாம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. 2018 பிப்ரவரியில்… Continue reading இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 6 கார்கள்

மஹிந்திராவின் மின்சார சூப்பர் கார்!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் மோட்டார்கண்காட்சியில் மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த பினின்ஃபரினா நிறுவனம் மின்சாரத்தில்இயங்கும் சூப்பர் காரை அறிமுகம் செய்தது.   ஃபார்முலா1 பந்தயக் காரைவிட அதிவேகமாக செல்ல கூடியது பட்டிஸ்டா. மணிக்கு 100 கி.மீ.வேகத்தை இரண்டே விநாடிகளில் அடையும் திறன் கொண்டது. இதுகுறித்து பினின்ஃபரினா தலைமை செயல் அதிகாரி மிஷெல் பெர்ஷ்கே கூறியது “உலகின்மிகச் சிறந்த கார்களில் ஒன்றாக பட்டிஸ்டா விளங்கும். வாகனத் துறை வரலாற்றில் தனிமுத்திரையை இந்தக் கார் பதிக்கும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலானபசுமைத் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 150 கார்கள் மட்டுமேதயாரிக்கப்படும். இவை அனைத்தும் இத்தாலியில் உள்ள ஆலையில் உருவாக்கப்படும் என்றார். இத்தாலியின் பிரபல பினின்ஃபரினா நிறுவனத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மஹிந்திராகையகப்படுத்தியது.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லா நிறுவனத்தின் அடுத்த வாகன அறிவிப்பு..!

டெஸ்லா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘மாடல் Y’ எலக்ட்ரிக் கார் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனை டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தன் ட்விட்கள் மூலம் உறுதி செய்தார். ஐந்து சீட்கள் இருக்கும் என எண்ணப்படும் மாடல் Y, 40,000 டாலர் (28.35 லட்சம் ரூபாய்) மதிப்பில் இருக்கலாம். இந்தியாவில் இன்னும் டெஸ்லா தன் கார்களை அறிமுகம் செய்யவில்லை. எனவே மாடல் Y இந்தியா சாலைகளுக்கு வர சில காலங்கள் பொறுத்திருக்க வேண்டும்.