இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது.

சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது. ஆனால், இளவரசர் முகமது பின் சல்மான் பதவி ஏற்ற பிறகு பெண்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்குதல் போன்ற பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. சவுதி அரேபியாவுக்கு சுற்றுலா வரும்போது இங்குள்ள ஓட்டல்களில் தங்கும் வெளிநாடுகளை சேர்ந்த ஆண் மற்றும் பெண் தங்கள் உறவு முறைக்கான ஆதாரங்களை இனி சமர்ப்பிக்க தேவையில்லை என சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், சவுதியை சேர்ந்த பெண்கள் உரிய ஆவணங்களை காண்பித்து ஓட்டல்களில் தனியாக அறையெடுத்து தங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
@ காலத்திற்க்கேற்ற கோலம்🌐