நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.🌐

நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இந்த படம் மெல்ல மெல்ல ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஓடத் தொடங்கிய நிலையில் புதிய படங்களுக்காக அந்த படத்தை தங்களது திரையரங்குகளில் இருந்து உரிமையாளர்கள் எடுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வேதனையடைந்த பார்த்திபன் திரையுலக நண்பர்களுடன் இணைந்து சென்னை திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களை சந்தித்தார். நடிகர் பார்த்திபன் நடித்து வெளிவந்துள்ள ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட வேண்டும் என திரையரங்க உரிமையாளர்களுக்கு அப்போது நடிகர் ராதா ரவி வேண்டுகோள் விடுத்தார். தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.ஒத்த செருப்பு திரைப்படத்தினை தொடர்ந்து திரையிட்டு ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் பார்த்திபன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.🌐