ரஜினியுடன் `பேட்ட’… இப்போது விஜய்க்கு வில்லன் – விஜய் 64 அப்டேட்ஸ்!👇🏾

ரஜினியுடன் `பேட்ட’… இப்போது விஜய்க்கு வில்லன் – விஜய் 64 அப்டேட்ஸ்!👇🏾
லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய் 64 படத்துக்கான பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது. காஸ்ட்டிங் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் இந்தப் படத்துக்கான வில்லன் யார் என நீண்ட விவாதம் நடந்துகொண்டிருந்தது. இறுதியில் விஜய் சேதுபதியை இறுதி செய்திருக்கிறார்கள் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் பரபரப்பு. ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர், இப்போது விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார்.

சினிமாவுக்கென்று சில சென்டிமென்ட் உண்டு. ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் ஹீரோ, டபுள் ஹீரோ சப்ஜெக்ட், வில்லன், கெஸ்ட்ரோல், கேமியோ என்று எந்தப் பாரபட்சமும் இல்லாமல் எல்லா ரோலிலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

விஜய்யுடன் மோதும் வில்லன் வேடத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம் 10 கோடி ரூபாயாம்.👇🏾🌐
தற்போது இரண்டரை கோடி ரூபாய் அட்வான்ஸ் வாங்கி, `விஜய்- 64′ படத்தில் வில்லன் வேடத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

தற்பொழுது ஆவலுடன் விஜய் – விஜய் சேதுபதி கூட்டணிக்காக தளபதி ரசிகா்கள் வெறித்தனமாக வெயிட்டிங் ஆம்!