Home செய்திகள் ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி...

ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

13

ரெப்போ வட்டி விகிதத்தை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தலைமையில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி குறைப்பால் வீடு, வாகனங்கள் உள்ளிட்டவைக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 4 முறை 1.10% ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்த நிலையில் மீண்டும் 5வது முறையாக விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள் ஆர்பிஐயிடமிருந்து பெறும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் என்பது ஆர்பிஐ வங்கிகளிடமிருந்து பெறும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி விகிதம்.நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது🌐