நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லவ பேரரசு காலத்தில் செழித்தோங்கி வளர்ந்த கலைத்திறனுக்கு சாட்சியாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் வரும் நிலையில், நமது மாமன்னர் இராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவுடன் வர்த்தகம் செய்துள்ளார் என்ற தகவல்கள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தில் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புத்த கோவிலுக்கு ‘சீனக்கோவில்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த போன்று தமிழகத்தை சேர்ந்த மன்னர்கள் சீனாவுடன் வர்த்தகம் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதற்கான பல்வேறு ஆதாரங்கள் தமிழ்நாட்டிலும், சீனாவிலும் காணப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்ககாலத்தில் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு வகைகளை மன்னர் அதியமானின் மூதாதயர்கள் இங்கு பயிரிட்டனர்.🌐