இன்றைய முக்கியச் செய்திகள்..!*

இன்றைய முக்கியச் செய்திகள்..!*

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதன்முறையாக இன்று சென்னை வருகிறார் மோடி. ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு. அதிமுக, திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்‌.

இடைத்தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு. அதிமுகவுக்கு ஆதரவு தருவது தொடர்பாக பாஜக இன்னும் முடிவெடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தகவல்.

வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய தடை. வியாபாரிகள் கையிருப்பு வைத்திருக்கவும் கட்டுப்பாடு. விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை.

பலத்த மழையால் தவிக்கும் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்கள். உத்தரபிரதேசத்தில் மட்டும் 4 நாட்களில் 93 பேர் மழைக்கு உயிரிழப்பு.

பதவி உயர்வுக்கான கால அளவை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு. அக்.30-ஆம் தேதி முதல் 48 மணி நேரம் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக எச்சரிக்கை.

திருப்பதியில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது பிரமோற்சவம். 9 நாள் விழாவை காண திருமலையில் குவியும் பக்தர்கள்.