அதிமுக விதிகள் திருத்தத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர் பாண்டியராஜன் கருத்து

அதிமுகவின் விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை தேர்தல் ஆணையம் அங்கீ கரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டில் நேற்று நடைபெற்ற கல்வி, வேலைவாய்ப்பு, வழிகாட்டி கருத்தரங்கில் பங்கேற்ற அமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுகவில் செய்யப்பட்ட விதிகள் திருத்தத்தை தேர்தல் ஆணையம் ஏற்குமா என்று முள்ளாக குத்திக் கொண்டிருந்த விஷயம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.

கட்சியில் நல்ல நோக்கத்துடன் கட்டமைப்பு மாற்றங்கள், சீரமைப்புகள் செய்யப்பட்டன. கட்சி அமைப்பாளர், இணை அமைப்பாளர், துணை அமைப்பாளர் போன்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு கட்சிப் பொதுக்குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கு இப்போது தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு கூடுதலாக ரூ.2 கோடி கிடைத்துள்ளது” என்றார்.

Leave a comment

Your email address will not be published.