`அந்தப் பட்டியலில் இடம்பிடிப்பாரா விராட் கோலி?’ -ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர்கள்!

இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற, முன்னாள் கேப்டன்கள் பட்டியலில் விராட் கோலியும் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விராட் கோலி

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதைதொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது. அடுத்ததாக வருகின்ற ஆகஸ்ட் 1-ம் தேதி இந்தியா – இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டிகள்  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த  1971-ம் ஆண்டில் இந்திய அணி கேப்டன் அஜீத் வடேகர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியதில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதே போல 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றி வெற்றியை நிலைநாட்டியது.

2002-ம் ஆண்டு, அப்போதைய கேப்டன் கங்குலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது. 2007-ம் ஆண்டு ட்ராவிட் தலைமையிலான இந்திய அணி, டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. 2014 -ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. இதில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, அஜீத் வடேகர், கபில்தேவ், டிராவிட் வரிசையில் விராட் கோலி இடம்பிடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.