அந்த மூன்று நிமிடங்கள் !! விக்ரம் லேண்டர் சிக்னல் துண்டிக்கப்பட்டது ஏன் ? இஸ்ரோ சிவன் விளக்கம் !!

அந்த மூன்று நிமிடங்கள் !! விக்ரம் லேண்டர் சிக்னல் துண்டிக்கப்பட்டது ஏன் ? இஸ்ரோ சிவன் விளக்கம் !!

சந்திரயான் – 2 விண்கலத்தின், ‘லேண்டர்’ சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, ‘இஸ்ரோ’ கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ – மாணவியரும் பெங்களூரு வந்தனர்.

”வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை காண, நாட்டு மக்களுடன், நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என அப்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்குவது மிகவும் சவாலான பணி என்பதால்,பிரதமர், விஞ்ஞானிகள் முதல், சாதாரண மக்கள் வரை, நேற்று இரவு, ‘திக்… திக்…’ மனநிலையிலேயே காத்திருந்தனர்.

இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், ‘லேண்டர்’ தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டது. இது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சி அடைந்தனர். கடைசி மூன்று நிமிடங்களில் தான் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.. இதையடுத்து, ‘விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்’ என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாள்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், நிலவின் பரப்பிலிருந்து 2.1 கிமீ வரை விக்ரம் லேண்டர் எதிர்பார்த்ததைபோலவே விக்ரம் லேண்டர் பயணித்திருக்கிறது. . அதன்பின் விக்ரம் ‘லேண்டர்’ உடன் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இது கடைசி மூன்று நிமிடங்களில் தான் நிகழ்ந்துள்ளது. அந்த மூன்று நிமிடங்களில் விக்ரம் லேண்டர் ஒரு வேளை திசை மாறியிருக்கலாம் என தெரிவித்த அவர், சிக்னல் துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் தகவல்களை ஆய்வு செய்ய உள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.