அன்னப்பறவையின் செய்திகள்

அன்னப்பறவையின் செய்திகள்

💥கோவை பீளமேடு அருகே செயல்பட்டு வந்த தனியார் கேட் ரிங் சர்வீஸ் நிறுவனத்தில் தீ விபத்து.

ரூ 10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்.

💥நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளின் அனைத்து கட்சி கூட்டம் ஆட்சியர் தலைமையில் தொடங்கியது.

💥தமிழகத்தில் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 15 நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்.

💥 புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில் நாளை விருப்ப மனு விநியோகம், நாளை மாலையே நேர்காணலும் நடைபெறும் – அதிமுக தலைமை

💥ஆளுநர் மாளிகைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு ஸ்டாலினுக்கு ஞானம் வந்துவிட்டதா?
– அமைச்சர் செல்லூர் ராஜூ.

💥 சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

💥தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
– வானிலை ஆய்வு மையம்.

💥ஆடியோ வெளியீட்டில் திரைப்படத்தை பற்றி பேசலாம்; ஒருவரை விமர்சித்து விளம்பரம் தேட அவசியமில்லை

பிறரை விமர்சிக்கும் முன்பு தங்களின் நிலையை நடிகர்கள் உணர்ந்து கொள்வது நல்லது
– அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

💥மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவை என்பதையே குறிப்பிட்டுள்ளார் நடிகர் விஜய்; சரியான தலைவர்களை தேர்வு செய்யத் தவறியதால் தவறு நடந்து கொண்டு இருக்கிறது.
– சீமான்

💥நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை.

💥பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் விஜய் கூறியது அவரது சொந்த கருத்து;
அதிமுக பேனர் விழுந்து உயிரிழந்ததால் சர்ச்சையானது, தனியார் பேனர் விழுந்திருந்தால் சர்ச்சை ஆகியிருக்காது

– விஜய பிரபாகரன்.

💥 ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சாலையில் வாகனம் மோதி 13 பசுக்கள் உயிரிழந்துள்ளது. சாலையோரம் படுத்திருந்த பசுக்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

💥ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 200 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மண்டபம் பகுதியில் இருந்து 2 விசைப்படகுகளில் கடல் அட்டைகளை கடத்த முயன்ற 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

💥தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும்? இனி தமிழன் என்று சொல்லிக்கொள்வதே வீண் – நடிகர் ராதாரவி.

💥 பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி:15 பேர் படுகாயம்.

💥திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள பச்ச மலையான் கோட்டை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் சிசு வீதியில் வீச்ச. சிசுவை கைப்பற்றி சமூக ஆர்வலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

💥“மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம்” – மனிதவள அமைச்சகம்.

💥சவுதி இளவரசரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்ற பாக். பிரதமர் இம்ரான்கான்.

💥நீட் ஆள்மாறாட்ட விவகாரம் குறித்து தேனி மருத்துவக் கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் தனிப்படை போலீசார் 2வது நாளாக விசாரணை

நேற்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்றும் விசாரணை.

💥கர்நாடகாவில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது..
பங்க் உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு.

💥சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக-காங். கூட்டணிக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு
– ஜவாஹிருல்லா

💥 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மநீம கட்சி போட்டியிடாதது அவர்களின் பயத்தை காட்டுகிறது

– அமைச்சர் தங்கமணி🔴