அன்னப்பறவையின் பலதரப்பட்ட செய்திகள் – மதன்

அன்னப்பறவையின் பலதரப்பட்ட செய்திகள் – மதன்
*
💥 இந்தியாவில் முதல் முறையாக கல்விக்கென தனி தொலைக்காட்சி தொடங்கப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

புதிய பாடத்திட்டம் சிறப்பாக இருப்பதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார் – அமைச்சர் செங்கோட்டையன்.
💥 ஆசிரியர் தேர்வில் 99 சதவீத பேர் தோல்வி அடைந்துள்ளனர், தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஏன் காலதாமதம் என தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் – கே.எஸ்.அழகிரி.

💥 வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு விவகாரம்:

எச் ராஜா போன்றவர்களின் தூண்டுதலின் விளைவாகத்தான் இதுபோன்ற சிலை உடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான தண்டனையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின் திமுகவின் பொன்முடி பேட்டி.

💥 ‘பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்’:

சென்னையில் முதல்முறையாக மின்சார பஸ்களின் சேவையை நேற்று சோதனை முறையில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

பெண்களின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார்.

💥 போக்குவரத்து காவலர் சீருடையில் கண்காணிப்பு கேமரா வசதி.

💥 ரூ.2 கோடி மதிப்பீட்டில், தக்காளியை பதப்படுத்தி மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்ட 5 வாகனங்களை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

💥 ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.

அடுத்த மாதம் 9 முதல் 27 ம் தேதி வரை ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.

💥 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.04 காசுகளாகவும் உள்ளது.

💥 தனியார் மருத்துவ கல்லூரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 எம்பிபிஎஸ் காலி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.

💥 மேல்முறையீடு மனு இன்று
விசாரணை:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை..

💥 பாஜக தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்:

ஏழைஎளிய மக்களின் மருத்துவதேவையை பாதிக்கும் என்பதால் அரசு மருத்துவர்களும் அரசும் அமர்ந்து பேசி உடனே தீர்வு காணவேண்டும்.கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் அரசுமருத்துவமனைகளையே நம்பியிருக்கும் ஏழை நோயாளிகள் சிகிச்சை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாதுவேலைநிறுத்தம்தவிர்க்கப்படவேண்டும்.

💥 ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு:

சென்னையில் அயனாவரத்தில், தனியார் நிறுவன அதிகாரி ஸ்ரீரெங்கா வீட்டில்; ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருட்டு.

ஸ்ரீரெங்கா தனது மனைவி அஞ்சனாவுடன், அமெரிக்கா சென்றிருந்த நிலையில் நகைகள் திருட்டு போயுள்ளன.

💥 ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தார் இந்தியவீரர் சுமித் நாகல்:

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் செட்டில் முன்னணி வீரர் ரோஜர் ஃபெடரரை தோற்கடித்தார் இந்தியவீரர் சுமித் நாகல்.

6-4 என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி ஃபெடரருடன் விளையாடி வருகிறார் சுமித் நாகல்.🛑