அன்னப்பறவை செய்திகள் – மதன்
Update Aug 29,Thu 2019
🔴தேசிய உழவர் உழைப்பாளர் கழகத் தலைவர் *ஜெ.ஜோதிகுமார் அவர்கள் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டி…
நமது கழகத்தில் மாவட்டங்களை பலபடுத்தும் பணிகளும் உறுப்பினர் சேர்க்கை பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுயிருக்கிறது திமுக-வுடன் இனணந்து பணியாற்றி கொண்டுயிருக்கிறோம். விரைவில் தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் மாநாடு அறிவிக்கும் என்று Duuk தலைவர் ஜெ.ஜோதிகுமார் அவர்கள் தெரிவித்தார்.
🔴 மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் தஞ்சை பிரச்னை அல்ல; தமிழகத்தின் பிரச்னை
இயற்கையின் சதியால் மட்டுமல்ல; அரசின் சதியாலும் காய்ந்து கொண்டிருக்கிறது நமது பூமி
தண்ணீர் கேட்பது நமது உரிமை; கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை; கர்நாடக அரசு கடமை தவறி வருகிறது
– மு.க.ஸ்டாலின்
🔴தேசிய விருது கிடைத்திருக்கணும் –
பரியேறும் பெருமாள் உட்பட பல படங்களின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
🔴பியூஷ் மானுஷ் மீது தாக்குதல்
சேலம் பாஜக அலுவலகத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மானுஷ் மீது தாக்குதல். பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது பற்றி விளக்கம் கேட்கச் சென்றபோது தாக்குதல் எனத் தகவல்.
🔴விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
ரிசர்வ் வங்கியில் இருந்து பெற்ற ரூ.1.76 லட்சம் கோடியை கொண்டு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை.
🔴மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை.
வீட்டு உபயோக மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை
மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை
– மின்வாரியம் விளக்கம்
🔴 பிள்ளையார்பட்டி சுற்றுலா அறிமுகம்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் பிள்ளையார்பட்டி சுற்றுலா அறிமுகம்
செப்.1 சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலகத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும்
பெரியவர்களுக்கு சுற்றுலா கட்டணம் ரூ.2,600; 6-12 வயதுடையோருக்கு ரூ.1,300.
🔴 9தீர்மானங்கள் நிறைவேற்றம்
காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மு.க.ஸ்டாலின் தலைமையிலான கருத்தரங்கில் தீர்மானம்
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தல் உட்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்.
🔴 எ.வ.வேலு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி
சொத்து வரி உயர்வை எதிர்த்து திமுக எம்எல்ஏ., எ.வ.வேலு தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
🔴 உதவி பேராசிரியர் பணி
தமிழ்நாடு அரசு கலை/அறிவியல் கல்லூரிகள் மற்றும் உயரக் கல்வி கல்லூரிகளில் 2340 உதவி பேராசிரியர் பணிகள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பதை ஆகஸ் – 28 ஆம் தேதி அறிவித்தது ஆசிரியர் தேர்வு வாரியம் .
🔴 நடிகர் சங்கம் – மனு தள்ளுபடி
பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டப்படுவதாக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
🔴 ஐ.ஜி. முருகன் வழக்கு – தெலுங்கானாவுக்கு மாற்றம்.
பெண் எஸ்.பி ஒருவர் ஐ.ஜி. முருகன் மீது தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் தெலங்கானாவுக்கு மாற்றி அமைத்திருக்கிறது . மேலும், தெலங்கானா போலீஸ் இந்த விசாரனையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை தரவும் உத்தரவு.
🔴 புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல்
நாடு முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பேரிடர் மேலாண்மை உள்கட்டமைப்பு உருவாக்குவதற்கும், சர்க்கரை ஏற்றுமதி மானியத்துக்காக ரூ. 6,268 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
🔴 உச்ச நீதிமன்றத்தில் வாதம் ஆரம்பம்
தற்போது சிபிஐ காவலில் உள்ள முன்னாள் நிதியமைச்சர், பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (இடி) கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது தொடங்கியுள்ளது.
அமலாக்கத்துறையின் (ED) சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வாதாடி வருகிறார்.
🔴 பன்னா இஸ்மாயில்- எஸ். பி மோதலுக்கான காரணம்
பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை கொல்ல முயற்சித்த வழக்கில் 2013ல் ஆந்திராவில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் பன்னா இஸ்மாயில்.
நேற்று, சிறையில் நடந்த கைதிகளின் குறைதீர்க்கும் கூட்டத்தில் பன்னா இஸ்மாயிலும், பிலால் மாலிக்கும் பங்கேற்காததை கேள்வி கேட்கச் சென்றார் எஸ்.பி . பின், இருவர்களுக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு வரையில் சென்று இருப்பதாக அங்கிருந்த தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
🔴 ராமர் சேது பாலம் நம்முடைய பொறியாளர்களால் கட்டப்பட்டது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேச்சு
மேற்குவங்கத்தில் உள்ள காரக்பூர் ஐஐடியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்: “நாம் ராமர் சேது பாலம் பற்றி பேசும்போது, அது அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மணி பொறியாளர்களால் கட்டப்பட்டதா? இல்லை. அது நமது பொறியாளார்களால் கட்டப்பட்டது. அது இன்றும்கூட உலகத்தின் அற்புதமாக இருக்கிறது” என்று கூறினார்.
🔴 பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளைப் போல உடனடி தண்டனைகள் கொடுக்க வேண்டும் – நடிகை திரிஷா
சென்னையில் நடைபெற்ற யுனிசெப் கூட்டத்தில், யுனிசெப்பின் நல்லெண்ண தூதராகப் பங்கேற்ற நடிகை திரிஷா, பாலியல் குற்றங்களுக்கு அரபு நாடுகளில் உள்ளது போன்ற உடனடி தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
🔴 மதுரை ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட் – காவல்துறை
இயக்குனர் உத்தரவு
மதுரை ஆயுதப்படை காவல் உதவி ஆணையராக இருந்த தண்டீஸ்வரன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வுபெற இருந்த நிலையில் காவல்துறை இயக்குனர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். தண்டீஸ்வரன் ராமநாதபுரத்தில் பணியாற்றியபோது காவலர் உடற்தகுதி தேர்வில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔴 சிசிடிவி கேமராக்கள் மூலம் 50% குற்றங்கள் குறைந்துள்ளன – சென்னை மாநகர காவல் அணையர்
ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை அக்கரை பகுதியில் 217 சிசிடிவி கேமரா செயல்பாட்டினை தொடங்கிவைத்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், செயின் பறிப்பு வழக்குகளில் சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் விரைந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் 50% குற்றங்கள் குறைந்துள்ளன, குற்றங்களை தடுக்க பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம்” என்று கூறினார்.
🔴 முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: தமிழக முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் வெளிநாடு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
🔴 திமுக இளைஞரணி நிர்வாக மாவட்டங்களை ஏழு மண்டலங்களாகப் பிரித்து உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
திமுக இளைஞரணி பணிகளை விரைந்து நிறைவேற்றும் வகையில் இளைஞரணி நிர்வாக மாவட்டங்களை ஏழு மண்டலங்களாகப் பிரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
🔴 கும்பல் கொலைகளைத் தடுக்க வலிமையான சட்டங்கள் தேவை – மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில், “உத்தரப் பிரதேசத்தில் கும்பல் வன்முரை ஒரு புதிய வடிவத்தை எடுத்துள்ளது. இப்போது ஒரு அப்பாவி பெண் கும்பல் தாக்குதலுக்கு பலியாகி உள்ளார். அந்த பெண் குழந்தை திருடுபவர் என்று சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற தவறான சம்பவங்களில் மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கும்பல் கொலைகளைத் தடுக்க வலிமையான சட்டங்கள் தேவை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
🔴 ராகுல் காந்தி தனது வயநாடு தொகுதிக்கு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேரளாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட தனது வயநாடு தொகுதிக்கு சென்று அங்குள்ள பாவளி கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து உரையாடினார்.
🔴 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் அக்டோபர் முதல் வாரத்தில் அரசியல் சாசன அமர்வு தலைமையில் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔴 காஷ்மீர் செல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி காஷ்மீர் சென்று அவரது கட்சி எம்.எல்.ஏ யூசுப் தாரிகாமியை சந்திக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சீதாராம் யெச்சூரியின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “நீங்கள் ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் நாங்கள் உங்களை காஷ்மீர் செல்ல அனுமதி அளிக்கிறோம். நீங்கள் அங்கே மற்ற வேறு எந்த விஷயத்திற்காகவும் செல்லக்கூடாது” என்று கூறியுள்ளார்.
🔴 வருமான வரி தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை வடபழனியில் உள்ள விஷால் தயாரிப்பு நிறுவனம் வருமான வரியை குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
🔴 புதுச்சேரி சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி அம்மாநிலத்தின் நிதித்துறை பொறுப்பு வகிக்கிறார். அந்த வகையில், முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
🔴 மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 லிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதலவர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கலில், மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,500 லிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
🔴 ஊட்டியில் பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கமளிக்க உத்தரவு
ஊட்டி ஏரி மாசடைவதை தடுக்க, டீசல் படகுகளுக்கு பதிலாக பேட்டரி படகுகளை இயக்குவது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஊட்டி மாசடைவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீலகிரி ஆட்சியர் அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு.
🔴 வீடு திரும்பினார் வைகோ
சென்னை போரூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீடு திரும்பினார்.
🔴 சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லைமீறி செல்கிறது – கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், ப.சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லைமீறி செல்கிறது. எந்தச் சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்தார்.
🔴 முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்திற்கு பயன் உள்ளதா என்பது கேள்விக்குறி – திமுக எம்.பி. கனிமொழி
முதலீடுகளை ஈர்க்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு புறப்பட்ட நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் தமிழகத்திற்கு பயன் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
🔴 சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேற்றம் – இஸ்ரோ அறிவிப்பு
சந்திராயன் – 2 வின்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் 3வது நிலைக்கு முன்னேறி உள்ளது என்றும் 4 கட்டம் உள்ள நிலையில், 3வது கட்டத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
🔴 முதல்வரின் லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா மேம்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா மேம்படும். தமிழக சுகாதாரத்துறை அடுத்த இலக்கை நோக்கி அடைய உள்ளது என்று கூறினார்.
🔴 நான் வெளிநாடு செல்வதை மட்டும் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவது ஏன்? – முதல்வர் பழனிசாமி
வெளிநாடு செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலவர் பழனிசாமி: திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? நான் வெளிநாடு செல்வதை மட்டும் கொச்சைப்படுத்தி பேசுகிறார் என்று கூறினார்.
🔴 நான் தொழிலதிபர் இல்லை; விவசாயி – முதலமைச்சர் பழனிசாமி
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல்வே தொழிலதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழில் அதிபர் இல்லை. சாதாரண விவசாயி. நான் நேரில் சென்று அழைத்தால்தான் தொழிலதிபர்கள் தொழில் தொடங்க தமிழகத்துக்கு வருவார்கள்.🔴