அமெரிக்காவின் வாஷிங்டன் போன்று புதுடெல்லிக்கு வான் ஏவுகணை கவசம்! – மத்திய அரசு முடிவு

உலகத்திலேயே ஏழு நாடுகளில்தான் இந்த பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்கா இந்த பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. அதைத் தவிர்த்து நார்வே, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இருக்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் போன்று புதுடெல்லிக்கு வான் ஏவுகணை கவசம்! - மத்திய அரசு முடிவு

தேசிய தலைநகரான புதுடெல்லியைப் பாதுகாக்க புதியதாக ஏவுகணை கவசத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது இந்தியா. பாதுகாப்புத் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் கீழ் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்துதல் சபை (Defence acquisitions council (DAC)) தேசிய மேம்பட்ட வான் ஏவுணைக்கான மேற்பரப்பு அமைப்பு-II (National Advanced Surface to Air Missile System-II (NASAMS-II)யினை கையகப்படுத்துவதற்கான ஒப்புதல் அளித்துவிட்டது. இதன்மூலம் வான்வெளி எல்லைக்குள் நுழைபவற்றை அடையாளம் காணவும், அதை உடனடியாக அழிக்கவும் செய்யலாம். மேலும், எதிரிகளின் ஏவுகணைகள், கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைளையும் எளிதில் அழிக்க முடியும். உலகத்திலேயே ஏழு நாடுகளில்தான் இந்தப் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. 2005-ம் ஆண்டு முதல் அமெரிக்கா இந்தப் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி வருகிறது. அதைத் தவிர்த்து நார்வே, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளிலும் இருக்கிறது. அமெரிக்காவிடம் இருந்து இதைப் பெறுவதற்கு 1 பில்லியன் டாலர் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published.