அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் இப்போது குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 செவிலியர்களுக்கும் இப்போது குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் உள்ளது போர்ட்லாண்ட் நகரம். இங்குள்ள மைன் மெடிக்கல் மையத்தில் பணியாற்றும் ஒன்பது செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாயினர்.

அப்போது அந்த மருத்துவமனை, ‘எங்கள் மருத்துவ மையத்தின் 9 செவிலியர்கள் (போட்டோவில் 8 பேர்) ஒரே நேரத்தில் கர்ப்ப மாகியுள்ளனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை ஏப்ரல் மற்றும் ஜூலையில் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்து கர்ப்பத்துடன் இருக்கும் அவர்களின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது.

இந்தப் புகைப்படம் அப்போது அதிகம் கவனிக்கப்பட்டது.

இப்போது அந்த 9 செவிலியர்களும் மூன்று மாதத்துக்கு முன் குழந்தை பெற்றுள்ளனர். அந்த குழந்தைகளின் புகைப்படத் தையும் அதே மருத்துவ மையம், தங்கள் சமூக வலைத்தளத்தில் இப்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது.