அமெரிக்காவில் ‘கிரீன்கார்டு’ பெற அதிக வருமானம் தேவை – புதிய விதிமுறைகள் அறிவிப்பு👇🏾

அமெரிக்காவில் ‘கிரீன்கார்டு’ பெற அதிக வருமானம் தேவை – புதிய விதிமுறைகள் அறிவிப்பு👇🏾

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்டு’ பெறுவதற்கு அதிக பட்ச வருமானம் தேவை என்கிற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். இதனால் அவரது நிர்வாகம் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க சட்டப்பூர்வமான குடியேற்றத்தை கட்டுப்படுத்தவும் டிரம்ப் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.👇🏾
👆🏽அந்த வகையில் வெளிநாட்டினர் அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க வழங்கப்படும் ‘ஹெச் 1பி’ விசா பெறுவதை கடினமாக்கும் வகையில், பல்வேறு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்டு’ பெறுவதற்கான புதிய விதிமுறைகளை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி ‘கிரீன் கார்டு’ பெற விரும்பும் வெளிநாட்டினர் அதிகபட்ச வருமானமும், அதிகபட்ச கல்வித் தகுதியும் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட் டுள்ளது.

அதாவது குறைந்த வருமானம் மற்றும் குறைவான கல்வித் தகுதி பெற்றவர்கள் இனி ‘கிரீன்கார்டு’ கேட்டு விண்ணப்பிக்க முடியாது. அப்படி விண்ணப்பிக்கும் பட்சத்தில் புதிய விதிமுறைகளின் கீழ் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

‘கிரீன்கார்டு’ கேட்டு விண்ணப்பிப்பவர்கள் அந்நாட்டு அரசின் மருத்துவக் காப்பீட்டு, ரே‌‌ஷன் மானியம் போன்ற நலத்திட்டங்களை சார்ந்திருக்காமல் அதிகப்படியான வருமானம் பெறுபவராக இருக்க வேண்டும்.

இதன் மூலம் அமெரிக்கர்களுக்கே அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் சென்றடையும் என்றும் அமெரிக்காவில் வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்த அளவு வருமானம் கொண்ட ஏழ்மையான குடியேறிகளை குறிவைத்து நியாயமற்ற முறையில் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டு உள்ளதாக குடியேற்ற உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.

மேலும் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் சுமார் 4 லட்சம் ‘கிரீன்கார்டு’ விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த புதிய விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இதற்கிடையில் டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து, கோர்ட்டில் வழக்கு தொடர இருப்பதாக நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்