அமெரிக்காவில் செய்தி நிறுவன அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் உயிரிழப்பு

மேரிலேண்ட்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்திலுள்ள அன்னபோலிஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தி கேப்பிடல் கெஜட் என்ற செய்தி நிறுவன அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அலுவலகத்தில் நுழைந்த மர்மநபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்று வருகிறது.

வெள்ளை மாளிகை கண்டனம்

மேரிலேண்ட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.