அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக இந்தியாவிலிருந்து 7,000 அகதிகள் விண்ணப்பம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக இந்தியாவைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் விண்ணப்பத்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ள தாவது:

உலக அளவில் வேறு நாட்டுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர், ஒரு குறிப்பிட்ட இனத்தவர்களுக்கு எதிரான வன்முறை, அரசின் அடக்குமுறைகள் காரணமாக லட்சக்கணக்கானோர் இவ்வாறு புலம்பெயர்ந்து வருகின்றனர்.

அதன்படி, கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் 6 கோடி பேர், தங்கள் நாட்டைவிட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அந்த வகையில், நாளொன்றுக்கு 44,500 பேர் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

அதேபோல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான அகதிகள், தாங்கள் தஞ்சம் புகுவதற்கு அமெரிக்காவையே தேர்ந்தெடுத்துள்ளனர். இதில், இந்தியாவிலிருந்து 7,400-க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவில் தஞ்சமடைவதற்காக கடந்த ஆண்டு விண்ணப்பித்திருந்தனர்.

Leave a comment

Your email address will not be published.