ஈரான்: அமெரிக்காவின் பொருளாதார தடையை முறியடிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. ஈரானுடான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளையும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து எங்களை வெளியேற்றுவது சாத்தியம் இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் ஏற்றுமதியை தொடர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருகிறது.
அமெரிக்கா பொருளாதார தடை எதிரொலி: கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஈரான் முடிவு
