அமேசான்தீயும் தண்ணீர் மற்றும் எண்ணெய் அரசியலும் – லத்தீன்அமெரிக்கா 👇🏾

அமேசான்தீயும் தண்ணீர் மற்றும் எண்ணெய் அரசியலும் – லத்தீன்அமெரிக்கா 👇🏾

உலகில் ஏதோ ஒரு காட்டு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் நமக்கு என்ன கவலை என்று #அமேசான் காட்டுத்தீயை நம்மால் நகர்ந்து செல்ல முடியாது காரணம் அவை பூமியின் நுரையீரல் பகுதி

லத்தீன் அமெரிக்க நாடுகள் பல வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெட்ரோலிய மற்றும் கணிம வள நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருப்பவை அதில் மிக முக்கியமானது 60% அமேசான் காடுகளை உள்ளடக்கிய #பிரேசில்

ExxonMobil,#TotalSA,Shell போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் தொடர்ந்து அமேசான் காடுகளில் தங்குதடையின்றி பெட்ரோலிய வளத்தை சுரண்ட தடையாக இருப்பது அமேசான் பூர்வகுடிகள்

உலகில் தண்ணீர் வளமிக்க நாடுகள் பட்டியலில் முதலாவது இடத்தில் இருப்பது பிரேசில்

#பிரேசில்,#பராகுவே,#அர்ஜென்டினா,#உருகுவே என தென் அமெரிக்க நாடுகளில் 1,20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி மண்ணுக்கு அடியில் கிடக்கிறது Guranniacqufier

ஏற்கனவே வட அமெரிக்காவில் உள்ள OgalallAcqufier பகுதியை சிறிது சிறிதாக அமெரிக்க பன்னாட்டு உணவு தயாரிப்பு நிறுவனங்கள் அக்கிரமித்து அழித்துவிட்டன

அமெரிக்காவின் Greatlakes ஒவ்வொன்றும் Nestle போன்ற உணவு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன அவற்றிக்கு எதிரான போரட்டங்களும்,வழக்குகளும் மக்களால் நடத்தப்படுகின்றன

பராகுவே உள்ள GuranniAcqufier பகுதியில் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் 3 லட்சம் ஏக்கர் உள்ளதாகவும் நம்பப்படுகிறது

இந்த GuranniAcqufier உலக மக்கள் முழுமைக்கும் 200 வருடங்களுக்கு தண்ணீர் தர கூடியதாகும்

உலகில் வளர்ந்து வரும் தண்ணீர் பஞ்சம் தீவரமடையும் போது தண்ணீர் தான் உலகில் விலை உயர்ந்த பொருள்,அந்த தண்ணீர் வளத்தை கட்டுப்படுத்தவே அமேசான் காடுகள் பரவியுள்ள லத்தீன் அமெரிக்க நாடுகளில் Puppet அரசுகளை நிறுவி உலக வங்கி,IMF போன்ற தனது அரசியலின் பொருளாதார ஆயுதங்களை வைத்து அந்நாடுகளை தங்களது உணவு நிறுவனங்கள் மூலம் Bananarepublic க்களாக தக்கவைத்துயிருக்கிறது அமெரிக்கா

கியூப புரட்சிக்கு முன்னர் Unitedfruitcompany என்ற அமெரிக்க உணவு நிறுவனம் தான் அந்நாட்டை கட்டுப்பாட்டில் வைத்துயிருந்தது

Guranniacqufier மற்றும் அமேசான் காடுகளுக்கு அருகே வாழும் பூர்வகுடிகள் பல்வேறு காரணங்களை கூறி அரசுகள் வெளியேற்ற முயற்சிப்பது அதனை எதிர்த்து வழக்கு தொடுத்து பல காலம் போராடி வெற்றி பெறும் போது காடுகளில் செயற்கை தீ விபத்துகளை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்தி வெளியேற்ற நினைப்பதும்

அவர்களை பல்வேறு முறைகளில் அடக்குமுறைகளுக்கு ஆளாக்கி வெளியேற்றுவதும் தொடர் கதையாக உள்ளது

உலக சுற்றுசூழலுக்கு அமேசான் காடுகள் எப்படி முக்கியமோ அப்படி உலகிற்கே 200 வருடங்கள் தண்ணீர் தரவல்ல GuranniAcqufier முக்கியமானது.👇🏾
தமிழர்ஆய்வுக்கூடம்