அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் காயம்

அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 2 மாணவிகள் காயம்

🔵🔵நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.

🔵🔵நேற்று மாலை 5ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவரும், வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர்.

🔵🔵 அப்போது திடீரென கழிவறையின் ஒரு பக்க சுவர் வெளிப்புறமாக சாய்ந்து விழுந்தது.

🔵🔵 அலறியடித்தபடி அவர்கள் வெளியே ஓடிவந்தனர்.

🔵🔵இதில் கழிவறையின் கதவில் மோதி இருவரும் தலை மற்றும் காலில் காயம் அடைந்தனர்.

🔵🔵 சத்தம்கேட்டு ஓடி வந்த மற்ற மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகள், இரு மாணவிகளையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.