அருமையான அளவு சாப்பாடு

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன்.

இப்போது என் வீட்டிலும் பிரிட்ஜ் இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை.

அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை.

அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி.

சோஃபாவும் அப்படித்தான்!

பீட்ஸா, பர்கர்ன்னு என்றெல்லாம் விதவிதமான பேர்கள் சொல்லினாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா’ என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

4 GB RAM, quardcore processor, 128 GB in built memory என்று அனைத்துமே பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன்.

ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு வாங்கி வைத்தேன் ஒரு தொலைக்காட்சி பெட்டி. ஆனால் இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு இல்லை இல்லை வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம்.

கால மாற்றம் இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தா கூட செலுத்தியாகிவிட்டது. எல்லாம் இருந்தும் எதையும் சரிவர பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில்லை பயன்படுத்துவதும் இல்லைன்னு. வெத்து பந்தான்னு கூட சொல்லுவேன் அப்படித்தான் ஆகிப்போச்சி பொழப்பு.

அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.

எல்லாவற்றையும் நினைத்துப்பார்த்தால் எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது.

இது ஒரு Duplicate வாழ்க்கை
என்று உணர முடிகிறது.

வீட்டை மிதித்தவுடன் களைப்பில் ‘சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்’ என்ற நினைப்பில் தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையனையைத்தான் கண்கள் தேடும்.

இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. உணர்த்தவும் செய்தது.

நமக்கு பண வரவு, சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று ஒருமுறை சரி பார்த்துக்கொண்டு,
ஆனால் வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த
நெருக்கமான வாழ்வைத்தான்.

இந்த குழந்தைகள் எல்லாம் இந்த பொம்மைதாண் வேணும்ணு அழும் வாங்கி கொடுத்தப்புறம் ஒருநாளோ இரண்டுநாளோ விளையாடும் அப்புறம் சீந்தாது அதுபோலத்தாண் நாமும்.

படிச்சவங்களுக்கு புரியுதோ புரியலையோ அனுபவிச்சங்க இதை
கண்டிப்பா உணருவாங்க.