ஆசிய ஜூனியர் பேட்மிட்டன் போட்டி- இந்தியாவிற்கு தங்கம்

ஆசிய ஜூனியர் பேட்மிட்டன் ஆடவர் பிரிவில் 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தங்கம் வென்றுள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய 17 வயது லக்‌ஷயா சென், தாய்லாந்து வீரர் குன்லாவுட்டை எதிர்கொண்டார்.விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 21-19, 21-18  என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்து வீர‌ரை எளிதாக வீழ்த்தினார் லக்‌ஷயா சென்.. இதற்கு முன் 1965 ஆம் ஆண்டு கவுதம் தக்கார் என்பவர் தங்கம் வென்றிருந்தார். அதற்கு பின்னர் ஆடவர் பிரிவில், தற்போது தான் இந்தியாவிற்கு  தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.