ஆசிய தடகளம்: இந்தியாவுக்கு 17 பதக்கம்

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் தடகளப் போட்டியில் இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றது. கடைசி நாளில் மட்டும் 2 தங்கம் உள்பட 4 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியது.

ஜப்பானின் கிபு நகரில் இந்தப் போட்டிகள் நேற்று நிறைவடைந்தன. கடைசி நாள் போட்டியின்போது ஆடவர் பிரிவில் இந்திய வீரர் கமல்ராஜ் கனகராஜ் மும்முறைத் தாண்டுதல் போட்டியிலும், அஜித் குமார் 5000 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய மகளிர் அணி வெள்ளியும், 200 மீட்டர் மகளிர் பிரிவு ஓட்டத்தில் ஜிஸ்னா மேத்யூ வெண்கலமும் வென்றனர். போட்டியில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தம் 17 பதக்கங்களை கைப்பற்றி 3-வது இடத்தைப் பிடித்தது.

Leave a comment

Your email address will not be published.