ஆப்கனில் வான்வழித் தாக்குதல்: தலிபான் தலைவர்கள் 50 பேர் பலி…

ஆப்கானிஸ்தானில்  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தலிபான்  தலைவர்கள் 50 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ”ஆப்கானிஸ்தானிலுள்ள ஹெல்மண்ட் மாகாணத்திலுள்ள முசா குலா மாவட்டத்தில் தலிபான்களின் ஆக்கிரமிப்புப் பகுதியில்  நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் தலிபான் தலைவர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக சண்டை நடந்து வருகிறது” என்றார்.

இந்த நிலையில் தலிபான்கள் இதனை மறுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் குடிமக்கள் பகுதிகள்தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 5 பேர் பலியானதாவும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.

எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், போலீஸாரை குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இந்த வான்வழித் தாக்குதலை அமெரிக்கப் படைகள் நடத்தியுள்ளன.

Leave a comment

Your email address will not be published.