ஆப்கானிஸ்தானில் வான்வழித்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையில் நடைபெற்ற வான்வழித்தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காபூல்,
ஆப்கானிஸ்தானில் கிழக்கு நங்கார்ஹர் மாகாணத்தில் ஐ எஸ் கோரசான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பல மோசமான தாக்குதல்களை இந்த இயக்கம் நடத்தியுள்ள நிலையில், ஐ எஸ் கோரசான் அமைப்பு பதுக்கி வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் கிடங்கை குறி வைத்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையில் வான்வழித்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், ஐ எஸ் கோரசான் அமைப்பு பதுக்கி வைத்திருந்த அனைத்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானிலுள்ள குரோன் பகுதியில் செயல்பட்டுவந்த தெரிக் இ தலிபான் தீவிரவாத இயக்கத்தை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.