ஆர்டிகிள் 15′ படத்தின் ரீமேக்கில் அஜித்? AK61

ஆர்டிகிள் 15′ படத்தின் ரீமேக்கில் அஜித்? AK61👇🏾🌐

அஜித் – வினோத் காம்போவில் உருவாகி வெளியான `நேர்கொண்ட பார்வை’, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், தனது 60-வது படத்தில் அஜித், மீண்டும் வினோத்துடன் கைகோத்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான படம், `நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான `பிங்க்’கின் ரீமேக்கான இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதை முடித்த கையோடு மீண்டும் வினோத்துடனே கைகோத்துள்ளார், அஜித். இம்முறை வினோத்தின் சொந்தக் கதையில் நடித்துவருகிறார். பொதுவாக நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் வேலைகளுக்கு நடுவிலே அடுத்த படத்துக்கான பிளானிங்கில் இறங்கிவிடுவார் அஜித். 60-வது படத்தை நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 61-வது படத்துக்கான கதையில் கவனம் செலுத்திவருகிறாராம், அஜித்.

சமீபத்தில், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான படம் `ஆர்டிகிள் 15′. சாதி எதிர்ப்பை மையமாக வைத்து வெளியான இப்படத்தை மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். நெட்ஃப்ளிக்ஸில் வெளியான பிறகு படத்துக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்திருந்தது. அனுபவ் சின்ஹா தயாரித்து இயக்கிய இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்திருந்தது. படம் மாபெரும் வெற்றியடைந்ததையடுத்து படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் பெற்றிருந்தார்.

வினோத்தின் இயக்கத்தில் நடித்து முடித்த பின்னர், இதன் ரீமேக்கில் அஜித் நடிக்க இருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் தகவல் கிளம்பியுள்ளது. ஏற்கெனவே போனி கபூரின் தயாரிப்பில் 2 படங்களில் பணியாற்றிவிட்டார், அஜித். ஒருவேளை இப்படத்தின் ரீமேக்கில் நடித்தால் இது மூன்றாவது படமாக இருக்கும். படத்தின் இயக்குநர் குறித்த செய்தி இன்னும் வெளியாகவில்லை. வினோத் படத்தை முடித்த பின்னர் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, புஷ்கர் – காயத்ரி, விக்னேஷ் சிவன், சுதா கொங்காரா போன்ற பல இயக்குநர்கள் அஜித்தை அணுகி கதை கூறியுள்ளனர்.🌐