ஆறு என்ற சொல்லுக்கு வழி என்பது பொருள்.

ஆறு என்ற சொல்லுக்கு வழி என்பது பொருள். ஆறு மலையில் தொடங்கி காட்டில் ஓடி சமவெளி கடந்து கடலில் கலப்பது இயற்கை. ஆறின் துணையோடு மனிதன் வாழ்ந்து வளர்ந்து வந்ததை தினைகளாக பிரித்து சொன்னது தமிழ்.

மலை வேட்டுவன் வேட்டையாடி சோர்ந்து தன் தேவைக்கு தானே வளர்த்தால் என்ன என எண்ணி இடையனாக உயர்ந்து மேய்வனவற்றிற்கு உணவுத் தேடி சோர்ந்து பயிரிட்டால் என்ன எண்ணி உழவனாகி உயர்வு பெற்று மரபணுவில் பதிந்துள்ள வேட்டையாடுதலை மறவாது பொங்கி எழும் நீரின் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தி மீனவனாக உயர்ந்தான். ஒவ்வொரு தினை உயர்விற்கு இடையில் பன்நெடுங்கால பயணத்தில் அவனது உணவு உடை உறைவிடம் என அனைத்துமே மாற்றம் கண்டது.

உணர்வின் வளர்ச்சி மாற்றமாக இயற்கையை அஞ்சி வணங்கியவன் அதோடு எதிரிகளை வேட்டையாடும் ஆயுதங்களையும் அவர்களை வென்ற மூத்தோரையும் வணங்கி தினைக்கொருவரை துணையாக கொண்டான். முதல் தினையில் உருவான வேல் வழிபாடும் சேயோனும் தான் மூலம்.

தமிழரின் தொன்மையும் தொடக்கமும் வேல் வழிபாட்டிலிருந்து தான் வளர்ந்து வந்துள்ளது.

வேல் வழிபாட்டை மறக்காமல் கடத்துவது நமது கடமை. அதை ஈழத்து நல்லூரில் ஈழத்தமிழர் சிறப்பாக நடத்திவருகின்றனர்.
👆🏽தமிழ்நாட்டில் அதுபோன்ற நிகழ்வு பெரிதாக தென்படவில்லை. நடக்கின்றதா ? நடக்காததால் தான் விநாயக சதுர்த்திக்கு விடுமுறை விடும் அரசு தைப்பூசத்தை கண்டுக்கொள்வதில்லை. அதை முன்னெடுக்க வழி உண்டா ? சொல்லுங்கள்🌐