இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லாட்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி கண்டால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விடும். தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்தை கதிகலங்க வைத்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்து வீச்சு மீது இன்றைய ஆட்டத்திலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த ஆட்டத்தை ஜூலை 15-ந்தேதி நடத்த தான் முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை மனதில் கொண்டு, ஒரு நாள் இடைவெளி விட்டு உடனடியாக வைத்து விட்டார்கள். குல்தீப் யாதவின் பவுலிங்கை, வீடியோ காட்சிகள் மூலம் அலசி ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஆயத்தமாக, இங்கிலாந்து வீரர்களுக்கு இந்த அவகாசம் போதுமா? என்று தெரியவில்லை.

ஆனாலும் சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க எல்லா வகையிலும் முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a comment

Your email address will not be published.