`இந்தியன்-2′

அந்த நாட்டுலலாம் இன்னமும் பழைய கிராமங்கள், நகரங்கள், தெருக்களெல்லாம் அப்படியே பராமரிச்சிட்டு வராங்க. சுதந்தரத்துக்கு முன்னாடி இந்திய நகரங்களும் ஐரோப்பியர் ஸ்டைலில்தான் இருந்தது. அதனால அங்க ஒரு ஷெட்யூல் ஷூட் பண்ணப்போறோம்,” என்கிறார் படக்குழுவில் இருக்கும் ஒருவர்.

மேலும், கமல்ஹாசனுக்குத் தற்போது சென்னையில் வேறு சில வேலைகள் இருப்பதால், மதுரவாயல் ஶ்ரீகோகுலம் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் முதல் கட்டப் படப்பிடிப்பை நடத்திவருவதாகவும், அதைத் தொடர்ந்து கமல் முழுவதும் ஃப்ரீ ஆனதும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஐரோப்பாவில் நடத்தப்போவதாகவும் கூறப்படுகிறது.👇🏾🌐
[
👆🏽இதனிடையே `இந்தியன்-2′ ஒரு ஸ்பேஸ்-த்ரில்லராகவும் இருக்க வாய்ப்புள்ளதாக, மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் கதைப்படி வில்லன் விண்வெளிக்குத் தப்பிச்செல்லப் போவதாகவும், அதற்காக விண்வெளி போன்ற ஒரு செட்டை எழுப்பப் படக்குழு சில விவாதங்களை மேற்கொண்டுவருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த செட் விண்வெளியைப் போலவே ஜீரோ-கிராவிட்டியோடு அமையும்படி இருக்க வேண்டும் என இயக்குநர் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள். இதற்காக இரண்டு மூன்று முறைகளுக்கான அடிப்படை டிசைனை ஆர்ட் டைரக்‌ஷன் குழு தயாரித்துவிட்டதாகவும் தெரிகிறது. இப்போது அதில் ஷங்கர் ஒரு டிசைனை ஓ.கே செய்துவிட்டால் உடனே செட்டை உருவாக்கத் தயாராக இருக்கிறார்களாம்.🌐