இந்தியாவின் முதல் புல்லட் ரயில் – என்னென்ன வசதிகள்?

வரும் 2023ஆம் ஆண்டில் தனது பயணத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயிலின் வடிவமைப்பை தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேசன் (National High Speed Rail Corporation (NHSRC)) இறுதி செய்துள்ளது. தற்போதைய ரயில்வண்டியில் ஒரு கோச்சிற்கு நான்கு ஆண்/பெண் பொதுக்கழிப்பறைகள் உள்ளன. வரவுள்ள புல்லட் ரயிலில் முதன்முறையாக, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வடிவமைப்புடன்கூடிய கழிப்பறை வசதி அமையவுள்ளது. இந்த கழிப்பறையில் வீல் சேர் வசதியும் உண்டு.

புல்லட் ரயில்

அதேபோல், உடை மாற்றும் அறை மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தனி அறை, குழந்தைகளுக்காக சிறிய அளவிலான கழிப்பறை, டயபரைக் கழிக்க குப்பைத்தொட்டி, குழந்தைகள் கைகழுவுவதற்கு ஏற்றவகையில் குறைந்த உயரத்திலான ஸின்க் ஆகியவை முதன்முறையாக அந்த புல்லட் ரயிலில் வடிவமைக்கப்பட உள்ளன. மேலும் அந்த ரயிலில் ஃப்ரீசர் வசதி, சூடுபடுத்தும் வசதியும் உள்ளன. காபி, டீ, வெந்நீர் தயாரிக்கவும் வசதிகள் உள்ளன. அந்த ரயில் சென்றுகொண்டிருக்கும் ரயில் நிலையங்கள் குறித்த தகவல்களைக் காட்டும் எல்.சி.டி. திரை வசதி உள்ளது.

Leave a comment

Your email address will not be published.