இந்தியாவிலேயே முதன்முறையாக நியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் அமைப்பதற்கு மத்திய அணுசக்தித்துறை ஒப்புதல். 

இந்தியாவிலேயே முதன்முறையாக நியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் அமைப்பதற்கு மத்திய அணுசக்தித்துறை ஒப்புதல். தேனி மாவட்டம் பொட்டிப்புரம் பகுதியில் இந்த அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி, குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், ‘இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும். இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என மனு அளித்துள்ளனர்.🌐