இந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா ஏராக்ஸ் 155

இந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா ஏராக்ஸ் 155

இந்தியாவில் யமஹா ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த ஸ்கூட்டர் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக இதே ஸ்கூட்டர் ஜனவரி மாதத்தில் விற்பனையகம் ஒன்றில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
யமஹா ஏராக்ஸ் 155 இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், வெளியாகியிருக்கும் தகவல்கள் ஸ்கூட்டரின் வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை உணர்த்துகிறது. ஏராக்ஸ் 155 ஸ்கூட்டர் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக இருக்கிறது.
5.8 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே, ட்வின் எல்இடி லேம்ப்கள், மொபைல் சார்ஜர், கீலெஸ் இக்னிஷன் மற்றும் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் ஏராக்ஸ் ஸ்கூட்டருக்கு பிரீமியம் அந்தஸ்தை சேர்க்கின்றன. யமஹா R15 வெர்ஷன் 3 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஜின் புதிய ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்கூட்டரின் செயல்திறன் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏராக்ஸ் 155 ஸ்கூட்டரின் இன்ஜின் 14.8 பிஹெச்பி பவர், 13.8 என்எம் டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. இந்தியாவில் விற்பனையாகும் அப்ரிலியா எஸ்ஆர் 150 மற்றும் வெஸ்பா 150 ஸ்கூட்டர்கள் இத்தகைய செயல்திறன் வழங்குவதில்லை என்பது யமஹா ஏராக்ஸ் ஸ்கூட்டருக்கு சாதகனமான அம்சமாக இருக்கிறது..
இந்தியாவில் 150சிசி ஸ்கூட்டர்களின் விற்பனை குறைவாக இருக்கும் நிலையில், யமஹா ஏராக்ஸ் 155 வெளியீட்டு பின் இந்த நிலையை மாற்ற யமஹா திட்டமிட்டிருக்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் கியர்-இல்லா ஸ்கூட்டர்களின் விற்பனை இந்தியாவில் அமோகமாக நடைபெறுகிறது.
ஏராக்ஸ் 155 கொண்டிருக்கும் அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இதன் இந்திய விலை குறைந்தபட்தம் ஒரு லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். எனினும் இதன் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published.