இந்தியாவில் வெளியானது சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2 …

டெல்லி; பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும் சவால் விட்டு நிற்க கூடிய சியோமி நிறுவனத்தின் ரெட்மி Y2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.  5.99 இன்ச் ஹெச்டி பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 சிப்செட், 3/4 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, MIUI 9, 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த போனில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ். ஏஐ பியூட்டி அம்சம், ஆட்டோ ஹெச்டிஆர், பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், ஃபேஸ் அன்லாக், டூயல் சிம் ஸ்லாட், 3080 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட் போன் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனானது எலிகன்ட் கோல்டு, ரோஸ் கோல்டு மற்றும் டார்க் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.9,999 மற்றும் 4 ஜிபி ரேம் மாடல் விலை ரூ.12,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசான், Mi அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் Mi ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி Y2 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.1800 உடனடி தள்ளுபடி, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 240 ஜிபி கூடுதல் டேட்டா, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு அறிமுக தினத்தில் வாங்கும் போது ரூ.500 தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.