இந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு அந்தஸ்து: தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்க முடியும்

இந்தியாவுக்கு அமெரிக்கா சிறப்பு அந்தஸ்து: தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்க முடியும்

தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்கும் தகுதியை இந்தியாவுக்கு தந்து உள்ளது.
தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்கும் தகுதியை இந்தியாவுக்கு தந்து உள்ளது.
ஆசிய கண்டத்தில் புறக்கணிக்க முடியாத ஒரு நாடாக நமது நாடு வளர்ந்து வருகிறது. அதனால்தான் அமெரிக்காவில் யார் அதிபராக வந்தாலும் இந்தியா உடன் இணக்கமான உறவை பராமரிக்க விரும்புகிறார்கள். இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
அந்த வகையில் ராணுவத்துறையில் இந்தியா மிக முக்கியமான கூட்டாளி என்ற அங்கீகாரத்தை 2016-ம் ஆண்டு அமெரிக்கா வழங்கியது. இது, அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளைப் போன்று அந்த நாட்டில் இருந்து மேம்பட்ட மற்றும் அதிமுக்கிய தொழில் நுட்பம் வாங்குவதற்கு வழி வகுத்து உள்ளது.
இந்த நிலையில் இப்போது இந்தியாவுக்கு அமெரிக்கா ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை வழங்கி உள்ளது. தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு மட்டும்தான் இந்த அந்தஸ்து கிடைத்து உள்ளது.
ஆசியா கண்டத்தில் ஜப்பானுக்கும், தென்கொரியாவுக்கு மட்டுமே இந்த அந்தஸ்தை அமெரிக்கா தந்து உள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வர்த்தக சபை ஏற்பாடு செய்து இருந்த இந்திய பசிபிக் வர்த்தக மன்ற நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமெரிக்க வர்த்தக துறை மந்திரி வில்பர் ரோஸ் பதில் அளித்தார்.
அப்போது அவர், “ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆட்சியில் எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து மிக முக்கியமான ஒன்று” என்று கூறினார்.
இந்த அந்தஸ்தினால் இந்தியாவுக்கு என்ன பயன் என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து அமெரிக்க தரப்பில் கூறும்போது, “ வர்த்தக கட்டுப்பாட்டு பட்டியலில் வைத்து உள்ள குறிப்பிட்ட பொருட்களை, அங்கீகாரமற்ற, குறைவான அபாயத்தை கொண்டு உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி, மறு ஏற்றுமதி, பரிமாற்றம் செய்து கொள்ள எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து அங்கீகாரம் அளிக்கிறது” என்கின்றனர்.
மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரித்தான ரசாயன ஆயுதங்கள் அல்லது உயிரி ஆயுதங்கள், குற்ற கட்டுப்பாடு பொருட்களை எஸ்.டி.ஏ-1 அந்தஸ்து நாடுகள் மட்டுமே அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.