பாரீஸ்: இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து வலிமையான வளர்ச்சிக் கூட்டணியை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரான்ஸ் உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கு 7 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இத்தாலி சென்ற சுஷ்மா, அந்நாட்டில் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் கியூசெப்பி கான்டேவை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து நேற்று பிரான்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேக்ரானுடனான சந்திப்பின்போது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.இதுபற்றி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆற்றல், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் மிகவும் வலிமையான வளர்ச்சிக் கூட்டணியை உருவாக்க, இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து செயலாற்றி வருகிறது.
இந்தியா, பிரான்ஸ் இணைந்து வலிமையான வளர்ச்சி கூட்டணியை அமைக்கும்: வெளியுறவுத்துறை தகவல்
