
உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பைத் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி உள்ள இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றியடைந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்திய அணி தற்போது 9 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.இந்திய அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. உலகக் கோப்பைத் தொடர் வரும் ஜூலை 14-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்பின் இந்திய அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 4 வரை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
