இந்திய உணவுகளுக்கு தடை விதிக்கப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு

எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவுகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. #Emirates
துபாய்,

துபாயை தலைமையிடமாக கொண்டு இயக்கப்படும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இந்திய உணவு வகைளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.சர்வதேச நாடுகளுக்கு செல்லும் இந்தியர்களுக்கு அந்தந்த நாட்டு விமான நிறுவனங்கள் இந்தியர்களின் விருப்ப உணவு வகைகளை மெனுவாக வைத்துள்ளன. இந்நிலையில் எமிரேட்ஸ் விமானம் இந்திய உணவுகளுக்கு தடை விதித்து அதற்கான மெனுவையும் அதிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து எமிரேட்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளஅறிக்கையில், எங்கள் நிறுவனம் சுகாதார மற்றும் உணவு தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை கருத்தில் கொள்வது எங்கள் சேவைத் திறனை மேம்படுத்த உதவும். மேலும் இந்துப் பயணிகள் விமானத்தில் கொடுக்கப்படும் இந்திய உணவு வகை அல்லாத சைவ மற்றும் அசைவ உணவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்தியாவின் ஜெயின் மத உணவு வகைகள், இந்திய காய்கறி உணவுகள், மாட்டிறைச்சி அல்லாத உணவு உள்ளிட்ட இந்திய உணவு  வகைகள் எமிரேட்ஸ் விமானத்தில் மெனுவில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.