இந்திய பொருளாதார நிலை குறித்து – அரவிந்த் சுப்ரமணியம்.

இந்திய பொருளாதார நிலை குறித்து –
அரவிந்த் சுப்ரமணியம்.

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி சதவீதம் சரியாக கணக்கிடப்படவில்லை.  உண்மையில் 2.5 சதவீதம் குறைவு. ஆனால், 7 சதவீதம் என்று தவறான தகவல் தரப்பட்டுள்ளது. உள்நாட்டு மொத்த உற்பத்தி திறன் வளர்ச்சியை கணக்கிடும் அளவீடுகள் பலவற்றை அரசு மாற்றியது. இப்படி மாற்றியதால் ஒட்டுமொத்த பொருளாதார அளவீடுகள் கணக்கிடும் முறையும் மாறியது. இதை வேறு யாரும் சொல்லவில்லை.  கடந்த சில  ஆண்டாக பாஜ அரசில் முக்கிய பங்காற்றியவர். பிரதமர் மோடிக்கு நேரடியாக பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியம் தான். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தன் ஆய்வு அறிக்கை ஒன்றை அவர் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளார். அதில் அவர் இந்திய பொருளாதார நிலை குறித்து இவ்வாறு விளக்கியுள்ளார்.
இதற்கு காரணம், விவசாயம், உற்பத்தி துறைகள் அடியோடு படுத்து விட்டன. இதன் வளர்ச்சி பல மடங்கு சரிந்து விட்டது.