இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 20ஆம் தேதி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் செப்டம்பர் 20ஆம் தேதி பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது. தி.மு.க.வின் உயர்மட்டக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், இந்தியாவின் ஒரே அடையாளமாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார சரிவு, காஷ்மீர் பிரச்சனை ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திருப்பவதற்காக அமித் ஷா இவ்வாறு கூறியிருப்பதாகவும் இது நாட்டின் பன்முகத்தன்மைக்கு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற அரசியல்சட்டத்தின் அடிப்படை நோக்கங்களுக்கும் மாறானது எனவும் தி.மு.க. கூறியுள்ளது.🌐