இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 180 பேரை காணவில்லை என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள தோபா ஏரி புகழ் பெற்ற சுற்றுலா இடமாக உள்ளது. இந்த ஏரியில் கடந்த திங்கள் கிழமை மாலை பெரிய படகு ஒன்று கவிழ்ந்தது. அதிக எண்ணிக்கையில் மக்களை ஏற்றியதால் படகு கவிழ்ந்ததாக தெரிகிறது. முதலில் 60 பேரை காணவில்லை என்றும் பின்னர் 90 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது 180 பேரை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர். 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். 180 பேர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது