இந்த உலகக் கோப்பையில் தோல்வியே காணாத அணியாக இந்தியா வலம் வருகிறது.வாழ்த்துகள். இந்தியா

நான் போன முறை போட்ட பதிவின் சாராம்சம் இன்றைய மேட்சில் உங்களுக்கு புாிந்திருக்கும். தோனி ஆடும் போது 41 பந்துகளில் 23 ரன்கள் இருந்தார்.

அவருக்கு பின்னால் வந்த பாண்ட்யா அவரை முந்தி 30 ரன்களை மிகக் குறைந்த பந்துகளில் அடித்தார்.

ஆனால் சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான பாண்ட்யா இன்று ஒரு சிக்சர் கூட அடிக்க முடியவில்லை. அரை சதமும் அடிக்க முடியவில்லை.

ஆனால் இன்றைய மேட்ச் முடிவில் 61 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் தோனி.! இது தான் 20 ஓவர் மேட்சுக்கும் 50 ஓவர் மேட்சுக்கும் உள்ள வித்தியாசம்.

இத்தனைக்கும் இன்று தோனி தப்பித்த ஸ்டம்பிங்கும் ஒரு அதிர்ஷ்டமே. ஒரு கேட்ச் கண்டத்தில் இருந்தும் தப்பினார்.

ஆனால் அவரது அனுபவம் அபாரமானது.

ஒரு நாள் ஆட்டம் வேறு, 20 ஓவர் ஆட்டம் வேறு.

இதோ 20 ஓவர் மேட்ச் போல ஆடி 18 ஓவர்கள் மீதம் வைத்து வேஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆகியுள்ளது.!

இந்த அணுகுமுறை மாற்றம் தான் இதுவரை இந்த உலகக் கோப்பையில் தோல்வியே காணாத அணியாக இந்தியா வலம் வருகிறது.வாழ்த்துகள். இந்தியா💐💐🌐

Attachments area