இன்றும் 4 தாலுக்காவில் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாவில் இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, கடந்த 3 நாட்களாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்றும் 4 தாலுக்காவில் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.