இன்று காலை 3 பேரும் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் இருந்து ஜெய்சால்மர் பகுதியில் உள்ள ராம் தேவரா கிராமத்திற்கு 3 பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
அவர்கள் செல்லும் வழியில் மோதிகார் என்ற இடத்தில் கோவில் ஒன்றின் அருகே நேற்றிரவு ஓய்வெடுக்க முடிவு செய்து அங்கு தங்கியுள்ளனர்.
ஆனால் அவர்கள் 3 பேரையும் பாம்பொன்று கடித்துள்ளது. இதனால் உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் உடல்நிலை மோசமடைந்த நிலையில் இன்று காலை 3 பேரும் உயிரிழந்தனர்.