இஸ்ரோ சிவனுக்கு பிரதமா் ஆறுதல்…👇🏾🌐

சந்திராயன்-2 வெற்றி 50% தோல்வி 50% நள்ளிரவில் என்னாச்சு இஸ்ரோவுக்கு.!👇🏾

இஸ்ரோ சார்பில் நிலவுக்கு அனுப்பிட்ட சந்திராயன்-2 விண்கலன் 50 சதவீதம் வெற்றியும் 50 சதவீதம் தோல்வியுமாக அடைந்துள்ளது.
அதாவது,

விக்ரம் லேண்டரில் இருந்து இஸ்ரோவுக்கு சிக்னல் கிடைக்கவில்லை. ஆனால் ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கின்றது. இது நிலவை தொடர்ந்து ஆய்வு செய்யும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2.1 கி.மீ முன் சிக்னல் கட் :

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்த விக்ரம் லேண்டரில் இருந்து, நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கி.மீ தொலைவில் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திராயன்-2 விண்கலனை இஸ்ரோ கடந்த ஜூலை 22ம் தேதி , ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களுடன் செலுத்தியது.

ஆர்பிட்டர் வெற்றி
சந்திராயன்-2ல் இருந்து பிரிந்த ஆர்பிட்டர் சாட்டிலைட் கருவி, நிலவின் சுற்றுவட்ட பாதையில், ஏற்கனவே சுற்றி விர துவங்கிவிட்டது.

விக்ரம் லேண்டர் தொடர்பு கட்?
ரோவருடன் தரையிறக்க உதவிம் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்கவில்லை. நிலவின் இருந்து 2.1 கி.மீ முன் அதன் இஸ்ரோ மையத்துடனான தொடர்பை முற்றிலும் இழந்துள்ளது.

ஓராண்டு ஆய்வு செய்யும்
ஆர்பிட்டர் மட்டும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கின்றது. இது நிலவை தொடர்ந்து ஓராண்டுக்கு ஆய்வு செய்யும். மேலும், தென்துருவத்தில் சுற்றுவட்ட பாதையில் ஆர்பிட்டர் சுற்றிவருகின்றது. இது நிலவை ஆய்வு செய்து வருகின்றது.

50% வெற்றி 50%தோல்வி
சந்திரயான்- 2ன் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் தொடர்ந்து செயல்பட்டு நிலவை ஆய்வு செய்யும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆர்பிட்டர் 95% பணி செய்யும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். லேண்டர் நிலவில் தரையிறங்கினாலும் கூட 14 நாட்கள் மட்டும் ஆய்வு செய்து இருக்கும். இந்த திட்டம் முழு தோல்வி என கூற முடியாது என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

மோடி விஞ்ஞானிகளுக்கு ஆறுதல்
பெங்களூர் இஸ்ரோ மையத்திற்கு நிலவில் தரையிறங்கும் காட்சியை காண வந்த பிரதமர் மோடி வாழ்கை என்றால் மேடு பள்ளம் இருக்கத்தான் செய்யும் என விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார்.
சந்திராயன்-2 நிலவை நெருங்கியது மிகப்பெரிய சாதனை. கடுமையாக விண்வெளி சேவையாற்றியுள்ளீர்கள் என்று இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர்களை மோடி தட்டிக் கொடுத்தார்.🌐