உங்கள் காரின் ஆயுளை ஆதிகரிக்க இதை செய்தால் போதும்..!

கார் தயாரிப்பாளர்கள் சராசரியாக ஒவ்வொரு காரையும் 3,50,000 கி.மீ. மேல் ஓடும் அளவிற்கு டிசைன் செய்துள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் தங்கள் காரை அவ்வளவு அதிகமாக பயன்படுத்துவதில்லை, சுமார் கார் 1 லட்சம் கி.மீ. ஓடிய பின்பே அதை வேறு ஒருவருக்கு சிலர் விற்றுவிடுகின்றனர். இந்த செய்தியில் ஒவ்வொரு காரை எப்படி பராமரிப்பது மூலம் எப்படி குறைந்தபட்சம் 3 லட்சம் கி.மீ. வரை எந்த வித பிரச்னையும் இல்லாமல் ஓட்ட முடியும் என்பதை நாம் பார்க்கலாம்.

சரியான காரை தேர்வு செய்யுங்கள் நீங்கள் நீண்ட நாள் சேர்த்து வைத்த பணத்தை வைத்தே காரை வாங்குகின்றனர். உங்கள் காசுக்கு ஏற்ற தரமான காரை நீங்கள் தேர்ந்தேடுக்க வேண்டியது கட்டாயம். உங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப மார்கெட்டில் உள்ள சிறந்த காரை நீங்கர் தேர்ந்தேடுக்க வேண்டியது கட்டாயம்.

மேலும் விற்பனைக்கு பின்பான சர்வீஸ் குறித்தும் நீங்கள்கருத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் தான் உங்கள் காரின் வாழ்நாளிற்கு முக்கியமான அம்சம். அதனால் உங்கள் தேவைக்கு ஏற்ற காரை தேர்வு செய்யுங்கள்

மாடிஃபிகேஷனை தவிர்த்து விடுங்கள் உங்கள் கார்களில் மாடிஃபிகேஷன் செய்வதை தவிர்த்து விடுங்கள். முக்கியமாக பெரிய வில்களை பொருத்துவது. அகலமான டயர்களை பொருத்துவது. இசியூ ரீமேப் செய்வது. ப்ரீ பிளோ எக்ஸாட், உள்ளிட்ட மாடிஃபிகேஷனை கட்டாயம் செய்யாதீர்கள்.

குறைந்த தூர பயணத்தை தவிர்த்து விடுங்கள் உங்கள் காரை 2 கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். குறைந்த தூர பயணத்திற்குள் உங்கள் வாகனம் வார்ம் அப் ஆகாது. பொதுவாகவே காரை நீங்கள் எடுப்பதற்கு முன்பாகவே 1 நிமிடம் ஆன்னில் வைக்க வேண்டும். அப்பொழுது தான் இன்ஜின் வார்ம் அப் ஆகி ஓட தயாராக இருக்கும்.

அதே நேரத்தில் காரின் டெம்பரேச்சர் நீடில் பாதி தூரம் வந்து விட்டாத என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள். காரை ஸ்டார்ட் செய்தவுடன் ரேஸ் செய்வதை தவிர்க்க வேண்டும். டர்போ சார்ஜ் இன்ஜின் ஆக இருந்தால் காரை ஆப் செய்வதற்கு முன்பாக ஒரு நிமிடம் ஐடியல் ஆக விட வேண்டும்.

சரியாக நேரத்திற்கு சர்வீஸிற்கு கொண்டு செல்லுங்கள் உங்கள் காரை சரியாக கால இடைவெளியில் சர்வீஸிற்கு கொண்டு செல்வது கட்டாயம். உங்கள காரில் உள்ள பல உதிரி பாகங்கள் சாியான இடைவெளியில் லுப்ரிகேஷன் செலுத்த வேண்டும். சில பாகங்களை குறிப்பிட்ட காலை இடைவெளியில் மாற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்படும். அதனால் நீங்கள் கார் தயாரிப்பாளரின் சர்வீஸ் காலத்தை கட்டாயமா கடை பிடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு 10,000 கி.மீ. இடைவெளியில் வீல் அலைமெண்ட் மாற்றுவது, ஒவ்வொரு 1 லட்சம் கிலோ மீட்டருக்கு ஒரு முறை டைமிங் பெல்ட் மாற்றவது கட்டாயமாக செய்ய வேண்டும்.

Leave a comment

Your email address will not be published.