உங்கள் குழந்தையை ஆரோக்கியமாகவும், ஒழுக்கமாகவும் வளர்க்க ஆசையா? இதை படிங்க

புதிதாய் பெற்றோர் ஆனவர்கள் தங்கள் குழந்தையை நினைத்து மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி எதுவும் தெரியாது இருப்பினும் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் அறிவுரைப்படி குழந்தையை வளர்க்க தொடங்குவார்கள்.ஆரம்பத்தில் எளிதாய் இருப்பது போல் தோன்றினாலும் நாட்கள் செல்ல செல்லத்தான் குழந்தை வளர்ப்பு எவ்வளவு கடினம் என்பதை உணருவார்கள்.

அனைத்து பெற்றோர்களுமே தங்கள் குழந்தையை அன்பாகவும், ஒழுக்கமாகவும் வளர்க்க வேண்டுமென்றுதான் விரும்புவார்கள். ஆனால் ஒழுக்கமாய் வளர்க்க அவர்கள் குழந்தைகளை சில விஷயங்களுக்கு கட்டாயப்படுத்தும்போது அது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே நல்ல பழக்கவழக்கங்களை குழந்தைப்பருவம் முதலே சொல்லி தரும்போது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அவற்றை பின்பற்றுவது கடினமாய் இருக்காது. இங்கே குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சொல்லித்தர வேண்டிய சில பழக்கவழக்கங்களை பார்க்கலாம்.

சேர்ந்து உடற்பயிற்சி செய்தல் சிறியவர் முதல் பெரியவர் முறை அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது உடற்பயிற்சி. பெரும்பாலான குழந்தைகளுக்கு உடற்பயிற்சி தனியாய் செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்களின் ஓட்டமும். விளையாட்டுமே சிறந்த உடற்பயிற்சியாய் அமைந்துவிடும். விளையாட்டாய் மட்டுமில்லாமல் உடற்பயிற்சி சொல்லிக்கொடுத்து பெற்றோர்களும் குழந்தைகளுடன் உடற்பயிற்சி செய்வது அவர்களை இன்னும் ஊக்கமடைய செய்யும். ஏனெனில் குழந்தைகளின் உலகமே பெற்றோர்கள்தான் அவர்களும் சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும்போது அது அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும். அவர்கள் சரியாக செய்யும்போது பாராட்ட மறந்துவிடாதீர்கள்.

பள்ளி குழந்தையின் அறிவையும், ஒழுக்கத்தையும் வளர்ப்பதில் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக பள்ளியில் அவர்கள் பயில்வது கல்வியை மட்டுமல்ல பலதரப்பட்ட மக்களின் கலாச்சாரம், பிறருடன் பழகும் விதம் குறிப்பாக நண்பர்கள். பள்ளியில் அவர்கள் பயின்றதையோ அல்லது விளையாடியதையோ உங்களிடம் கூறும்போது பொறுமையாய் உட்கார்ந்து கேளுங்கள், நீங்களும் அவர்களுடன் விளையாடுங்கள். இது இருவருக்குமிடையே உள்ள பிணைப்பை அதிகரிக்கும்.

Leave a comment

Your email address will not be published.